இந்த உலகத்தில் உன்னதமான ஒரு உறவு உண்டு என்றால் அது தாயும் மகனும் சேர்ந்த உறவு தான். தாய் தந்தை குரு தெய்வ என்ற வரிசையில் முதல் உறவாக தாய்மையை வைத்துள்ளார் நாம் முன்னேறுவர் அதனால் தாய் பிள்ளை மீது வைத்துள்ள உறவு என்பது கடவுளுக்கு மேலான உறவு அவ்வாறான உறவிற்கு நான் இங்கே கவிதை வரிகளை எழுதி உள்ளேன் படித்து பயன்பெறுவார்கள்.
உயிர் போகும் வலியை தாங்கி கொண்ட என்னால் உன் அழுகையின் உணர்வை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என் அன்பு மகனே.
உன் அருகில் இருப்பதை காட்டிலும் இந்த உலகில் வேறு இன்பம் கிடையாது.
ஒரு குழந்தைக்கு இந்த உலகத்தை அறிமுக செய்து வைக்கும் தெய்வமே தாய்.
அம்மா என்ற உறவு இல்லையென்றால் இந்த உலகமும் அனாதையே
ஒரு பெண்ணின் தாய்மையை உலகிற்கு அறிமுக செய்யும் தெய்வமே தன்னுடைய சேய்.
கண்கள் இல்லாமால் ரசித்தேன் காற்று இல்லாமல் சுவாசித்ததேன்.வார்த்தை இல்லாமல் பேசினேன்.கவலை இல்லாமல் வளர்ந்தேன்என் தாயின் கருவறையில் மட்டும்
நான் கருவில் வளர்ந்தால் பாரம் என்று தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்மட்டும் அல்ல.. உன் ஆயுள் முழுவதும்.
பத்து மாதம் சுமந்தாய் உன் வயிற்றில்,பல வருடங்கள் என்னை சுமந்தாய் வாழ்வில்,இனி என்றும் சுமக்க நினைக்கிறன் என் நெஞ்சில் அம்மா.!
வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் கண்டாலும் நாம் ரசிப்பது நிலாவை தான்..பூமியில் எத்தனையோ பெண்கள் இருந்தாலும் பெற்ற மகனை நேசிப்பது தாய் மட்டுமே.
விழுந்தாலும் எழுந்து நட என்று சொல்லும் தந்தையின் அன்பை விட நான் விழுந்து விட கூடாது என்பதில் கவனமாக இருப்பவளின் அன்பு உண்மையான பாசம்