Na Muthukumar Kavithai in Tamil -

Na Muthukumar Kavithai in Tamil

“உனக்கும் இல்லை! எனக்கும் இல்லை! படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்! நல்லவன் யார்? கெட்டவன் யார்? கடைசியில் அவனே முடிவு செய்வான்!”

“வாழ்க்கை எனும் நதி மரணம் எனும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு மேடு பள்ளங்களில் ஓட வேண்டியிருக்கிறது”

“அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகம் போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்து விடுவதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம்

நதியாலே பூக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை நதி அறியுமா கொஞ்சம் புரியுமா கரையோர கனவுகலெல்லாம்”

“ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கிறான், ஒன்று அவன் வாழும் கதை.. மற்றது அவன் வாழ ஆசைப்படும் கதை”

Leave a Comment