தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள் முன்னோர், அதுபோல தந்தை என்பவர் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும், தனது குடும்பத்தின் சுமையை சுமப்பவராகவும் இருப்பவரே தந்தை அவரை பற்றி ஒரு சில கவிதை இங்கே.

உலகத்திற்கு அறிமுக படுத்தியவள் அன்னையாக இருக்கலாம், அந்த உலகத்தில் வாழ வழி நடத்தி சென்றவர் தந்தை மட்டுமே

என்னை மட்டும் இல்லை என் கனவுகளையும் சேர்ந்து சுமப்பவர் ஒருவர் என்றால் அது என் தந்தை.

கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை. கடவுளே கிடைத்தார் அப்பாவாக.

தந்தையின் அதிகபட்ச கோபம் கூட தன் குழந்தையின் சிரிப்பலையில் அடங்கி விடும்.

கடவுளிடம் ஒரு வரம் கேட்டேன். கிடைக்கவில்லை, கடவுளே வரமாக கிடைத்ததார் என் அப்பா வடிவில்.

அம்மாவின் அன்பு ஆறு போல ஓடிக்கொண்டே இருக்கும். அப்பாவின் அன்பு என்பது கடல் போல அவரின் அவரின் அன்பை பெற்ற பிள்ளை இவ்வுலகில் மிகவும் வரம் பெற்றவரே

அப்பாவின் அன்பு என்பது கடல் போல கோபப்படும் பொது சுநாமியாகவும், அன்பு செலுத்தும் போது பல சுவாசியமான அதிசயங்களையும் இவ்வுலகில் அளிக்கும் ஒரு உறவு என்றால் அது அப்பா

தந்தை என்பவன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓடி திரிந்து ஒடாய் தேய்ந்து மண்ணுக்கு செல்லும் ஒரு வாழும் தெய்வமே தந்தை.

வாழ்வில் அம்மாவின் அன்பு மனைவி மூலம் கிடைத்து விடும் ஆனால் அப்பாவின் அன்பு கடவுளே நேரில் வந்தாலும் கிடைக்காது.

தனக்கு கிடைக்காத இன்பங்களை தன் பிள்ளைக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்து பிள்ளைகளுக்கு கொடுக்கும் உறவு தான் அப்பா..!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *