Akka thambi kavithai in tamil -

Akka thambi kavithai in tamil

ஒரு உறவில் எவ்வளவு சண்டை இருந்தாலும் கடைசி வரை பிரியாமல் இருக்கும் ஒரே உறவு தம்பி அக்கா உறவு மட்டுமே..!

அக்காவின் பாசத்தில் என் தாயின் பாசத்தை காண்கிறேன்…..!

நேரம் காலம் பார்த்து சண்டை போடுவதல்ல தம்பி அக்கா பாசம்..நினைத்த நேரம் எல்லாம் சண்டை போடுவது தான் தம்பி அக்கா பாசம்..!

வயது எவ்வளவு தான்
அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதும் 
சிறு குழந்தை தான்!

அம்மாவின் மறு உருவம்  நீ..
உனது முதல் குழந்தையாக  நான்
அன்பால் இணைந்து இருக்கும்
இரு விண்மீன்கள் 
அக்கா – தம்பி!

தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும்
தன் அக்காவின் அன்பும்
கண்டிப்பும் இன்னொரு
தாயின் உறவுக்கு சமம் என்று.!

தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் தெரிந்த ஒரு பெண்
அக்கா என்றால் அந்த
அக்கா தம்பி பாசம் என்றும்
ஒரு சொர்க்கம் தான்..!

வயது எவ்வளவு தான்
அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதும் 
சிறு குழந்தை தான்!

பிறப்பு, இறப்பு,  வாழ்க்கை,காதல்,
எல்லாம் ஒரே ஒரு முறை ஆனால்
நான் உன் மீது கொண்ட அன்பு  மட்டும்.உன் தம்பி நான் சாகும் வரை..அக்கா.!

தம்பிகள் கொண்ட
அக்காக்களுக்கு மட்டுமே
தெரியும். அது குட்டி குழந்தை அல்ல
குட்டி பிசாசு  என்று..!

Leave a Comment