Thozhi kavithai in tamil

தோழி என்பவள் ஒரு நட்பின் இலக்கணமாக மட்டுமே திகழாமல் ஒரு என்னைக்கு ஈடான் உறவாக இருப்பவள் ஒரு உண்மையான தோழியின் நட்பு, உண்மையான அன்பு, அன்னை பொல் அரவணைப்பு, கவலை, இன்பம், அனைத்து மனித இயல்புகளும் தோழியிடம் காணலாம் அவ்வாருள்ள தோழியின் நட்பு கவிதை இங்கே.

அன்று, முயற்சி இல்லாமல் முடங்கிக்
கிடந்தவனை தட்டியெழுப்பி
வெற்றி பெற வைத்தது
உன் ஈடுபாடும், உரிமையான
நட்பும் தான்!

என் இனிய தோழியே.. தூங்கி இருந்த வீணையை
மென்மையாய் தழுவி மீட்டிடும்
விரல்களாய்.. உன் நினைவுகள்
என்றும் என்னை உயிர்ப்பிக்கின்றன.

விட்டில் உள்ள விளக்கையே வெளிச்சமாக எண்ணி பூச்சி பொல
சுற்றிக் கொண்டிருந்த எனக்கு
சூரியனை போல ஒரு விடியலை காட்டியதே உன்
உண்மையான நட்பு தானே!

தோல்வியை கண்டு பயந்த
நேரத்திலெல்லாம் தோழியாய்
நின்று தோள் கொடுத்தாய்
இன்று, அந்த வானம் கூட
எனக்கு வசப்படும் துாரத்தில்!

தோழியின் நட்பு கவிதை தமிழ்

தோல்வியாக இருந்த என் முகவரியை வெற்றி என்ற புதிய முகவரியாக மாற்றி அமைத்தவள் என் அன்பு தோழி

இறைவன் எல்லா இடங்களிலும் எல்லோரையும் அரவணைத்து கொள்ள முடியாது என்பதற்காக தான்
அன்னையை படைத்தான் என்பார்கள்..
அன்னை இல்லாத இடங்களிலும்
தோழி நிரப்பி விட்டால் என்பதை
மறந்து விட்டார்கள்.

காதலின் நினைவுகளை விட
என் தோழியின் நினைவுகளுக்கு
வலிமை அதிகம் என்பதை சகியே
உன்னிடமே உணர்ந்தேன்.

காயப்படாத மனம் இல்லை..
கண்ணீரைச் பெறாத
கண்களும் இல்லை..
காயத்தை ஆற்றவும்
கண்ணீரைக் காணாமல் செய்யவும்
தோழியை தவிர
வேறு யாராலும் முடியாது.

பூக்களுக்கு தெரியாது நாம்
ஏன் வாடி போகிறோம் என்று, உன்னை போல ஒரு தோழியை பெற்றால் பூ அல்ல உலகத்தின் அரசன் கூட வாடமாட்டான்

Leave a Comment